ஈன்றெடுக்கும் புத்துயிரின்
ஸ்பரிசம் கலந்த முதல் குரல்
அன்னையாக அவள் புகட்டும்
தாய்ப் பால்!...
தெருமுக்கு யாசகருக்கு
சவரம் செய்யும்
ஐ.டி ஊழியர் ...
செந்தமிழை கொண்டாடும்
இவ்வுலகம்
அதன் கைபிடித்து
ஏற்றம் பெறும் நீங்களும் நானும்!...
வருமானம் ஒருபுறம் இருப்பினும்
கொடிய நோய்களின் ஊடே
நமக்காய் தவம் செய்யும் மருத்துவர்கள்!...
சிந்தனையின் தொடக்கமாய்
நம் கைபிடித்து
“அ” கரம் சுழிக்கும் ஆசிரியர்கள்!...
நம் நெடுஞ்சாலை நடைபயணத்தில்
நிழல் தந்து அரவணைக்கும்
வயதான புளிய மரம்!...
உதவி கேட்டு
குறுஞ்செய்தியனுப்பும்
குழந்தைகள் காப்பக பெண்!...
தாயின் பிம்பமாய்
கண் பார்த்து காரணமறியும்
அன்பு சகோதரி!...
சுட்டு விரல் விட்டுவிடாத
பேனா!...
மூளையின் விசைக்கு
மூச்சை இழுக்கும் இதயம்!...
அவள் பெயர் அறியாத நான்
என் பெயர் அறியாத அவள்
பேரன்பு!.....
-சரவணன் கந்தசாமி
1 comment:
மூளையின் விசைக்கு
மூச்சையிழுக்கும் இதயம்
இதுவொரு மந்திர வார்த்தை!
💐
Post a Comment