மந்திரப் புன்னகையாலே
இந்த மானிடம் ஜெயித்திடுவோம்…
மாயக் கருத்துகளகற்றி
உள மருத்துவம் பார்த்திடுவோம்
பத்திர தமிழின் மேலே
வாய்மை முத்திரை பதித்திடிவோம்
இந்த பசை மொழி கொண்டு
பல பாசங்கள் ஒட்டிடுவோம்
அதன் விடைகளென
இத்தகைய கவிதைகள் கட்டிடுவோம்…
பாசங்கள் ஒட்ட வைக்க
மனப் பட்டங்கள் வான் பார்க்க
எழுதுகோல் எண்ணிய எழுத்துகளை
எல்லாமாய் பிரசவிக்க
எழில் மொழி துணையிருக்கு
அனைத்தும் அதிலிருக்கு….
No comments:
Post a Comment