அழகின் கர்வம்
அழகில் வகுபடாத பேரழகு
பொன்னிற சாயல்
புயல் காற்றின் கர்வம்
நான் பாதங்களை தரையில்
வைத்திருப்பதை மறக்கடிக்கும் மிளிர்வு…
இளங்கீற்று இருதுளை மூக்கில்
வெளியேற்றாத முனைப்பு…
உறவுக்காரி சொல்லுக்கு
சிரித்தும் சிரிக்காமலும்
புன்னகை செய்யும் வித்தகி
தாமரை இலையில் தண்ணீர்பட்டதாய்
வழுக்கி விழுந்து
வழுக்கி விழுந்து
அந்த புன்னகையை எழுத நினைத்து
தினமும் தோற்கிறேன்…
கர்வத்தில் வகுப்பெடுத்து
நாணத்தில் தாலைவாரி
நளினத்தை உருண்டை திரட்டி
என் உணர்வினில் எறிபவளே
உந்தன் வனப்பு தேகம் போர்த்திய
மிடுக்கு சுடிதார் என்ன தவம் செய்ததோ
உன் தேகம் அணைத்து உன்னை காக்க
அத்தனை தவமும் செய்யக் காத்திருகிறேன்
எவனோ ஒருவனாய் உனக்காக…
எமக்கு இடமளித்த வளையல் கடைக்கும்
இதற்காகவே ஏற்பாடு செய்த திருவிழாவுக்கும்
நன்றிகள் பல…
-சரவணன் கந்தசாமி...
Comments