பெண்ணியம் போற்றுவோம்...

யிர் பெற்றோம்
உயிர் கொடுத்தோம்!...
அடுப்படி அடைத்தோம்
அரசுகள் அமைத்தோம்
அன்பெடுத்தோம் அதில்
ஆயுதம் செய்தோம்!...
கம்பெடுத்தோம் புது
காவியம் செய்தோம்!...
புத்தகம் எடுத்தோம்
புதியன செய்தோம்!...
வில் எடுத்தோம் அதிலே
வீரங்கள் செய்தோம்!...
வம்பு எடுத்தால்
வாயை உடைத்தோம்
ராக்கெட் எடுத்தோம்
உயர் வானம் அளந்தோம்
அணு துளைத்து அதில்
இராணுவம் செய்தோம்
துப்பாக்கி எடுத்து எம்
தேசம் காத்தோம்
ஆசிரியம் பயின்று
அதில் அறிவை தந்தோம்!...
கணினிகள் திறந்து பல
கனவுகள் படைத்தோம்
அன்புகளோடு அழகு
பண்புகள் செய்தோம்
ஆறுதலோடு ஒரு தேறுதல் செய்தோம்..
காதலோடு ஒரு
கண்ணியம் செய்தோம்
பெண்ணாக நின்று
குடும்பம் செய்தோம்!...
இப்பிறவி எடுத்தோம்
புவியினை காக்க...
ஆலயம் செய்து அதில்
அழகாய் நின்றோம்
சுதந்திரம் செய்தோம்
சுயம் தனை காத்தோம்.....


பாரதிக்கும் எமதன்பு
பெண்மைக்கும் சமர்ப்பணம்....

Comments

Popular posts from this blog

எண்கள்

பிஞ்சு மனம்

சிநேகிதம்