புதுமை திரும்பட்டும்

மிதக்கும் திட்டங்களும்
பறக்கும் திட்டங்களும்
நிலங்களை வகுந்தெடுத்து
நிற்கும் நெடுஞ்சாலைகளும்
எத்தனை வேகம் நம்மை
எடுத்த செல்லப் போகிறது?
மின்னல் வேக பயணத்தில்
சன்னலோரம் மறந்தோம்
சமிஞைகளில் கூட
உரையாட மறந்தோம்
அண்ணனும் தம்பியுமாய்
வாட்ஸ்அப்பில்
வம்பிழுத்து கொண்டோம்...
இமயத்தை குடைந்து
முதல் குகை செய்தோம்
இதயத்தை வகுந்தெடுத்து
இயந்திரமும் செய்தோம்...
இலக்கணத்து பிழை போல
இயந்திரமும் நாமும்
இணையானோம்....
நவீனம் அதை தூக்கிக்கொண்டு
நகைச்சுவையை
நாம் மறந்தோம்..
புதுமைகள்
புனைய முனைந்து
உதட்டோரம் ஒட்டியிருந்த
கொஞ்சம் புன்னகையையும்
கொன்று புதைத்தோம்...
இன்னும் பிழைத்திருப்பது ஏனோ
இத்துனூண்டு மனிதம் மட்டுமே....
அதை உயிர்ப்பித்து வைத்தல்
இந்த உலகுக்கு நாம் செய்யும் கடமை...

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்