Tuesday, 18 August 2020

துரோகம் அறு

 

விடியல் தேடும் மனமே                       

நெடிய தூரம் விழித்திரு

தினமும் உன்னை விழுங்கவே

திட்டமிடும் கூட்டம் உன்னுடனே

பாசம் என்பர் அதிலே

பரிவு என்பர் எல்லாம் முடிகையில்

வேடம் களைத்து உனக்கு

வேதனை தருவர்..

சமயம் பார்த்து சாரல் வரும்

சாரலோடு மன சாயம் விழும்

விழுந்து விடாதே உனது வாழ்வை

இழந்துவிடாதே

குணமிருந்தால் உன்னை குருடனென்பர்

பணமிருந்தால் உன்னை கடவுளென்பர்

காசுக்கான உலகமிது

கண்கொத்தி பாம்பாய் இருந்துவிடு

ஏமாற்றம் துரோகங்களை

வேறோடு அறுத்து விடு….

 

-சரவணன் கந்தசாமி...


No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...