Tuesday, 18 August 2020

வெல்லலாம் வா நண்பா

 

ழுது புலம்பும் கனவே                             

உன் அவமானங்களை சேமி

நீ இறந்த பின்னும்

உனக்கொரு பிறப்பினை அது தரும்

அவமானம் அதை

அடை காத்து வை

உன் கால்களில் சக்கரம்

கட்டி ஓட உதவும்

அவமானம் அதை

அப்படியே ஜீரணித்து விடாதே

நின்று நிதானமாய்

மென்று தின்று விழுங்கு

இது இரைப்பைக்கு செல்வதற்கல்ல

உன் இதயத்திற்கு செல்வதற்கு

இரத்த வெள்ளையணுக்களில்

துளி துளியாய் பத்திரப்படுத்து

எதிர்க்கும் விசையிலொரு

எந்திர குணத்தை கொடுக்கும்

கடலின் ஆழம் உந்தன் 

வழித் தடம் தான் 

எதிர் திசையில் முன்னேறு

எதிர் காற்றின் வேகம் தான் 

உன் பலத்தை தீர்மானிக்கும்...

ஆசைகளில் கலந்துபோன 

அத்தனை அவமானங்களின் 

நயத்தினையும் 

அணுஅணுவாய் இரசித்து

உடையாத உணர்வில் சேமி

நாளை என்றொரு 

நாள் இருக்கிறது

வெல்லலாம் வா நண்பா..... 


-சரவணன் கந்தசாமி...

 

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...