மனிதம் பேசு

சாதியம் பேசு                                                    

மதமும் பேசு

மானிட அறிவின்

எல்லையில் நின்று

மகுடம் சூட்டு

சாதிகள் இல்லையடி பாப்பா - என்ற

பாரதியை போற்றி

பள்ளி பதிவேட்டில்

சாதியை ஏற்றும்

சாதிகள் தானே நாம்

உள்ளுக்குள் நிறைந்த இறையை

உயர்வாய் தாழ்வாய்

நீ நான் பார்க்க

மதமென பிரித்தது நாம் தானே

சாதியத்தின் பின்புலம்

தமிழின சமூகத்தில்

குருதியோடு குலாவி திரியும்

மிகை நுட்பம்எனவே

உன் சாதியம் பற்று

இறையின் நிறையை

உன் விருப்பப்படி

உள்ளத்தில் நிறுத்து….

சாதியம் ஒழிகவென்று

தோள்தூக்கும் எசமானர்களே

உங்களால் தான்

சாதியம் இன்னும் வாழ்கிறது

மதசார்பற்ற என்று உரைக்கும்

மாமனிதர்களே உம்மால் தான்

மதங்களில் நிம்மதி மறந்து போனது

உன் சாதியம் பேசு

உன் மதத்தை பேசு

சன்நாயக நாட்டில்

உன் உரிமை நீ பேசு… 

உன்னை போன்றதொரு

உணர்வு இருக்கும் அடுத்தவருக்கும்

சமயங்களின் நோக்கங்கள்

இறைவனின் கையில் இல்லை

நம் கையில் இருகிறது

சமயம் போற்று

அதிலே சாதியம் போற்று

எதிரவன் உணர்வை நேசி

அவனின் சமயம் நேசி

உந்தன் இரண்டையும்

உமக்குள் வைத்து

என்றும் மனிதம் போற்று

சாதியம் , சமயம் இடக்கையில் தவழட்டும்

மனிதத்தின் நேசம் இதயத்தில் தவழட்டும்

 

-சரவணன் கந்தசாமி...

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்