மிதக்கும் திட்டங்களும் பறக்கும் திட்டங்களும் நிலங்களை வகுந்தெடுத்து நிற்கும் நெடுஞ்சாலைகளும் எத்தனை வேகம் நம்மை எடுத்த செல்லப் போகிறது? மின்னல் வேக பயணத்தில் சன்னலோரம் மறந்தோம் சமிஞைகளில் கூட உரையாட மறந்தோம் அண்ணனும் தம்பியுமாய் வாட்ஸ்அப்பில் வம்பிழுத்து கொண்டோம்... இமயத்தை குடைந்து முதல் குகை செய்தோம் இதயத்தை வகுந்தெடுத்து இயந்திரமும் செய்தோம்... இலக்கணத்து பிழை போல இயந்திரமும் நாமும் இணையானோம்.... நவீனம் அதை தூக்கிக்கொண்டு நகைச்சுவையை நாம் மறந்தோம்.. புதுமைகள் புனைய முனைந்து உதட்டோரம் ஒட்டியிருந்த கொஞ்சம் புன்னகையையும் கொன்று புதைத்தோம்... இன்னும் பிழைத்திருப்பது ஏனோ இத்துனூண்டு மனிதம் மட்டுமே.... அதை உயிர்ப்பித்து வைத்தல் இந்த உலகுக்கு நாம் செய்யும் கடமை...
உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது காவியம் செய்தோம்!... புத்தகம் எடுத்தோம் புதியன செய்தோம்!... வில் எடுத்தோம் அதிலே வீரங்கள் செய்தோம்!... வம்பு எடுத்தால் வாயை உடைத்தோம் ராக்கெட் எடுத்தோம் உயர் வானம் அளந்தோம் அணு துளைத்து அதில் இராணுவம் செய்தோம் துப்பாக்கி எடுத்து எம் தேசம் காத்தோம் ஆசிரியம் பயின்று அதில் அறிவை தந்தோம்!... கணினிகள் திறந்து பல கனவுகள் படைத்தோம் அன்புகளோடு அழகு பண்புகள் செய்தோம் ஆறுதலோடு ஒரு தேறுதல் செய்தோம்.. காதலோடு ஒரு கண்ணியம் செய்தோம் பெண்ணாக நின்று குடும்பம் செய்தோம்!... இப்பிறவி எடுத்தோம் புவியினை காக்க... ஆலயம் செய்து அதில் அழகாய் நின்றோம் சுதந்திரம் செய்தோம் சுயம் தனை காத்தோம்..... பாரதிக்கும் எமதன்பு பெண்மைக்கும் சமர்ப்பணம்....
சி ல பேசு … சில மெளனி … சில சுவாசி … சில புன்னகை செய் … கொஞ்சம் விலகியிருந்து உற்று கவனி … சில சவால்களின் சிநேகிதம் இவ்வளவு தான் …. -சரவணன் கந்தசாமி...
Comments