Saturday, 22 August 2020

அன்பு

 யிரம் வார்த்தைகளிலும் 

இன்று வரை கண்டறியப்பட்ட 

உலக மொழிகளிலும் 

அகப்படாத வார்த்தை !...

பேரின்பத்தின் நிறைவென்றும் 

பிரபஞ்சத்தின் தொடக்கமென்றும் 

வைத்துக் கொண்டால் 

எப்போதும் !. எங்கும் !.. எல்லாமும் !...

அன்பு மட்டும் தான் !...

உயிர் ஜனிப்பதற்கு - அந்த 

உயிர் வாழ்வதற்கு 

இறுதியாக மண்ணோடு புதைவதற்கு 

தாயாய் , தங்கையாய், 

அண்ணனாய் , தம்பியாய் , 

தாரமாய் , உரவாய்

வாழ்க்கையின் நிமிடங்களை 

விடைகளோடு கடந்து செல்ல வைக்கும் 

உள்ளுயிர் ஆற்றல் !...

அவளும் நானும் 

அவனும் நானும் 

பகிர்ந்து கொள்வதன் 

அடிப்படை நிலை அன்பு !...

காதலென்றும் வரையறுக்கலாம் !...

காமத்தின் நீட்சமென்றும் வரையறுக்கலாம் !...

நிறைவாய் அன்பு 

ஆனந்த பெருவெள்ள கண்ணீரில் 

பேச இயலாத மொழிகளில் 

நீந்தி கடக்கும் 

அன்புக்குரியவர்களுக்காக ...


சரவணன் கந்தசாமி

Tuesday, 18 August 2020

கிழி

 

காற்றைக் கிழிக்க                                    

எத்தனிக்கும் வண்ணத்துப்பூச்சியின்               

சிறகுகளின் வலிமை போதாதா

புயலின் வேகத்தை கடக்க….?


-சரவணன் கந்தசாமி...

எழிலி

 

ந்தி மாலையே                                      


ஆரிருள் எழிலே

அருமை கவியே

அழகு சிற்பமே

வானத்தின் முனைதொடும்

முக்கூடல் தேரே

பழங்களின் நவரசமே

பரிமாணத்தின் அழகு ரசமே

திருத்தமான புன்னகையின்

திகட்டாத என்னவளே…..

தினமும் உம்மை காணவே

திணறி திரியுதடி என் மனமே….


-சரவணன் கந்தசாமி...

 

வெல்லலாம் வா நண்பா

 

ழுது புலம்பும் கனவே                             

உன் அவமானங்களை சேமி

நீ இறந்த பின்னும்

உனக்கொரு பிறப்பினை அது தரும்

அவமானம் அதை

அடை காத்து வை

உன் கால்களில் சக்கரம்

கட்டி ஓட உதவும்

அவமானம் அதை

அப்படியே ஜீரணித்து விடாதே

நின்று நிதானமாய்

மென்று தின்று விழுங்கு

இது இரைப்பைக்கு செல்வதற்கல்ல

உன் இதயத்திற்கு செல்வதற்கு

இரத்த வெள்ளையணுக்களில்

துளி துளியாய் பத்திரப்படுத்து

எதிர்க்கும் விசையிலொரு

எந்திர குணத்தை கொடுக்கும்

கடலின் ஆழம் உந்தன் 

வழித் தடம் தான் 

எதிர் திசையில் முன்னேறு

எதிர் காற்றின் வேகம் தான் 

உன் பலத்தை தீர்மானிக்கும்...

ஆசைகளில் கலந்துபோன 

அத்தனை அவமானங்களின் 

நயத்தினையும் 

அணுஅணுவாய் இரசித்து

உடையாத உணர்வில் சேமி

நாளை என்றொரு 

நாள் இருக்கிறது

வெல்லலாம் வா நண்பா..... 


-சரவணன் கந்தசாமி...

 

துரோகம் அறு

 

விடியல் தேடும் மனமே                       

நெடிய தூரம் விழித்திரு

தினமும் உன்னை விழுங்கவே

திட்டமிடும் கூட்டம் உன்னுடனே

பாசம் என்பர் அதிலே

பரிவு என்பர் எல்லாம் முடிகையில்

வேடம் களைத்து உனக்கு

வேதனை தருவர்..

சமயம் பார்த்து சாரல் வரும்

சாரலோடு மன சாயம் விழும்

விழுந்து விடாதே உனது வாழ்வை

இழந்துவிடாதே

குணமிருந்தால் உன்னை குருடனென்பர்

பணமிருந்தால் உன்னை கடவுளென்பர்

காசுக்கான உலகமிது

கண்கொத்தி பாம்பாய் இருந்துவிடு

ஏமாற்றம் துரோகங்களை

வேறோடு அறுத்து விடு….

 

-சரவணன் கந்தசாமி...


நம் மொழி

 

ந்திரப் புன்னகையாலே                                   

இந்த மானிடம் ஜெயித்திடுவோம்

மாயக் கருத்துகளகற்றி

உள மருத்துவம் பார்த்திடுவோம்

பத்திர தமிழின் மேலே

வாய்மை முத்திரை பதித்திடிவோம்

இந்த பசை மொழி கொண்டு

பல பாசங்கள் ஒட்டிடுவோம்

அதன் விடைகளென

இத்தகைய கவிதைகள் கட்டிடுவோம்

பாசங்கள் ஒட்ட வைக்க

மனப் பட்டங்கள் வான் பார்க்க

எழுதுகோல் எண்ணிய எழுத்துகளை

எல்லாமாய் பிரசவிக்க

எழில் மொழி துணையிருக்கு

அனைத்தும் அதிலிருக்கு….

 

-சரவணன் கந்தசாமி...

மனிதம் பேசு

சாதியம் பேசு                                                    

மதமும் பேசு

மானிட அறிவின்

எல்லையில் நின்று

மகுடம் சூட்டு

சாதிகள் இல்லையடி பாப்பா - என்ற

பாரதியை போற்றி

பள்ளி பதிவேட்டில்

சாதியை ஏற்றும்

சாதிகள் தானே நாம்

உள்ளுக்குள் நிறைந்த இறையை

உயர்வாய் தாழ்வாய்

நீ நான் பார்க்க

மதமென பிரித்தது நாம் தானே

சாதியத்தின் பின்புலம்

தமிழின சமூகத்தில்

குருதியோடு குலாவி திரியும்

மிகை நுட்பம்எனவே

உன் சாதியம் பற்று

இறையின் நிறையை

உன் விருப்பப்படி

உள்ளத்தில் நிறுத்து….

சாதியம் ஒழிகவென்று

தோள்தூக்கும் எசமானர்களே

உங்களால் தான்

சாதியம் இன்னும் வாழ்கிறது

மதசார்பற்ற என்று உரைக்கும்

மாமனிதர்களே உம்மால் தான்

மதங்களில் நிம்மதி மறந்து போனது

உன் சாதியம் பேசு

உன் மதத்தை பேசு

சன்நாயக நாட்டில்

உன் உரிமை நீ பேசு… 

உன்னை போன்றதொரு

உணர்வு இருக்கும் அடுத்தவருக்கும்

சமயங்களின் நோக்கங்கள்

இறைவனின் கையில் இல்லை

நம் கையில் இருகிறது

சமயம் போற்று

அதிலே சாதியம் போற்று

எதிரவன் உணர்வை நேசி

அவனின் சமயம் நேசி

உந்தன் இரண்டையும்

உமக்குள் வைத்து

என்றும் மனிதம் போற்று

சாதியம் , சமயம் இடக்கையில் தவழட்டும்

மனிதத்தின் நேசம் இதயத்தில் தவழட்டும்

 

-சரவணன் கந்தசாமி...

அழகின் கர்வம்

 

ழகில் வகுபடாத பேரழகு                          

பொன்னிற சாயல்

புயல் காற்றின் கர்வம்

நான் பாதங்களை தரையில்

வைத்திருப்பதை மறக்கடிக்கும் மிளிர்வு

இளங்கீற்று  இருதுளை மூக்கில்

வெளியேற்றாத முனைப்பு

உறவுக்காரி சொல்லுக்கு

சிரித்தும் சிரிக்காமலும்

புன்னகை செய்யும் வித்தகி

தாமரை இலையில் தண்ணீர்பட்டதாய்

வழுக்கி விழுந்து

வழுக்கி விழுந்து

அந்த புன்னகையை எழுத நினைத்து

தினமும் தோற்கிறேன்

கர்வத்தில் வகுப்பெடுத்து

நாணத்தில் தாலைவாரி

நளினத்தை உருண்டை திரட்டி

என் உணர்வினில் எறிபவளே

உந்தன் வனப்பு தேகம் போர்த்திய

மிடுக்கு சுடிதார் என்ன தவம் செய்ததோ

உன் தேகம் அணைத்து உன்னை காக்க

அத்தனை தவமும் செய்யக் காத்திருகிறேன்

எவனோ ஒருவனாய் உனக்காக

எமக்கு இடமளித்த வளையல் கடைக்கும்

இதற்காகவே ஏற்பாடு செய்த திருவிழாவுக்கும்

நன்றிகள் பல


-சரவணன் கந்தசாமி...

சிநேகிதம்

 


சில பேசு …                                                            

சில மெளனி

சில சுவாசி

சில புன்னகை செய்

கொஞ்சம் விலகியிருந்து

உற்று கவனி

சில சவால்களின்

சிநேகிதம் இவ்வளவு தான்….


-சரவணன் கந்தசாமி...

வரலாறில் வராத புரட்சி

 

காய்ச்சிய இருப்புக் கம்பியை                         

இதயத்தின் இடம் விட்டு

வலம் எடுப்பதாய்

அந்த வலியிலும் ஒரு இன்பம்

சில நொடிகளுக்கு முன்

குருதியிலிருந்து ஹீமோகுளோபின்

இப்போது அண்டார்டிகாவிற்கு பயணமாயிற்று….

பாதத்தின் பெருவிரல் முதல்

தலைமுடியின் நுனி வரை

உயரும் குளிர்வு

செயற்கையாய் குளிர் காய்ச்சலை

எமதுடம்பில் கொண்டு வர

எந்த கல்லூரியில் சென்றடி

மருத்துவம் கற்றது உன் விழிகள்….

இரவிலும் கண் கூசுகிறது

கனவிலும் அது தொடர்கிறது

கவிஞர்கள் உருகியதன் காரணம்- உன்

கருவிழி கண்டநொடி அறிந்தேன்

பாரதி மட்டும் இருந்திருந்தால்

உந்தன் விழிபார்த்து

செந்தமிழ் விழிபாட்டு எழுதியிருப்பான்

இதயத்தின் மகிழ்வையும்

அழகு உதடுகளின் மெளனத்தையும்

உந்தன் விழிகளில் ஏற்றி

முரைப்பதாய் சில்மிசம் செய்து

நீ தோற்கையில்

அந்த கண்களில் தெரியுமடி

பேரானந்தத்தின் தீர்க்க தரிசனம்….

கணிதத்தில் எந்த தேற்றம் இது

வேதியியலில் எத்தகு மாற்றம் இது

இலக்கணத்தில் இல்லாத பிரிவு இது

வரலாறில் வராத புரட்சி இது….


-சரவணன் கந்தசாமி

 

வைகையே எழுந்து வா...

  

ருசநாடு  வனாந்திரம்

வழிமொழிந்த பத்திரம்

கருங்கல் உடைத்து கலங்கிப்

பொங்கிய கட்டுடல் நீர்மம்

மெல்ல ஆடி வருகுது

சொல்ல தேடி வருகுது

வைரமுத்து தெளித்த மையென

வெல்ல ஓடி வருகுது

வைகை என்னருகே

நாகரீக தோன்றலின் அடி நாதம்

நளினம் அதில் நீ ஆட

பண்புத் தமிழின் பெருவாரி

வளமை கொடுத்தது நீயே

தேனியில் பிறந்த நீ

மதுரையில் தவழ்ந்த நீ

கங்கைச் சீமையில் மகிழ்ந்த நீ

ராமநாத புரத்தில் ரம்மியமானாய்

பயிர்களுக்கு செந்தேனானாய்

கவிதைகளில் உன் கட்டழகை

கருவுறச் செய்யவுள்ளேன்

என்னருகே நீ வந்து

எடுத்தியம்ப உன் கதையை

வைகையே எழுந்து வா

தூங்கா நகர தாக விலக்கே

தத்துவம் சொல்ல எழுந்து வா

வறட்சிக்கு  மிரட்சி கொடுத்து

செழுமை செப்பனிடக் கொடுத்து

நித்தம் எந்தன் வயிறு

நிறையிட்ட உந்தன் ஈகை

சொல்ல எழுந்து வா

இனமிருப்பின் வாழ்வுண்டு

மொழியிருப்பின் வார்த்தையுண்டு

முயற்சியிருப்பின் வெற்றியுண்டு

நீ இருப்பின் எல்லோருக்கும் உயிருண்டு

அன்னையவள் அன்பின் தேகம்

வைகைத் தாயவள்எங்கள்

வரிய உயிரின் தாகம்

தொழில்நுட்பத்தில் தொலைந்த

மானிட அறிவுக்குஉந்தன்

அழகு பெருமை அள்ளித் தர

வைகையே எழுந்து வா…..


-சரவணன் கந்தசாமி

 

Monday, 17 August 2020

பேரன்பு

ன்றெடுக்கும் புத்துயிரின்

ஸ்பரிசம் கலந்த முதல் குரல் 

அன்னையாக அவள் புகட்டும் 

தாய்ப் பால்!...

தெருமுக்கு யாசகருக்கு 

சவரம் செய்யும் 

ஐ.டி ஊழியர் ...

செந்தமிழை கொண்டாடும் 

இவ்வுலகம் 

அதன் கைபிடித்து 

ஏற்றம் பெறும் நீங்களும் நானும்!...

வருமானம் ஒருபுறம் இருப்பினும் 

கொடிய நோய்களின் ஊடே 

நமக்காய் தவம் செய்யும் மருத்துவர்கள்!...

சிந்தனையின் தொடக்கமாய் 

நம் கைபிடித்து 

“அ” கரம் சுழிக்கும் ஆசிரியர்கள்!...

நம் நெடுஞ்சாலை நடைபயணத்தில் 

நிழல் தந்து அரவணைக்கும் 

வயதான புளிய மரம்!...

உதவி கேட்டு 

குறுஞ்செய்தியனுப்பும் 

குழந்தைகள் காப்பக பெண்!...

தாயின் பிம்பமாய் 

கண் பார்த்து காரணமறியும் 

அன்பு சகோதரி!...

சுட்டு விரல் விட்டுவிடாத 

பேனா!...

மூளையின் விசைக்கு 

மூச்சை இழுக்கும் இதயம்!...

அவள் பெயர் அறியாத நான்

என் பெயர் அறியாத அவள்

பேரன்பு!.....


-சரவணன் கந்தசாமி

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...