சில மாதங்களுக்கு முன்னர் , அதிவேகமாக தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு பாரபட்சமின்றி பரவி பல உயிர்களை பலிதீர்த்த நேரம். எனது தங்கைக்கும் விடாத காய்ச்சலினால் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றோம் . தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றும் இருப்பினும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினார்கள். தீவிரமான காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது தான் சரியென்று தோன்றியது. ஒருவழியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகள் தொடர்ந்தன.தங்கையை பார்த்துக் கொள்ள சித்தி மருத்துவமனையில் இருக்க அன்றிரவு வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் மருத்துவமனையினுள் நுழைந்தேன். பரபரப்புக்கு பஞ்சமில்லாத நுழைவுவாயில், வாகன விபத்தாளர்களின் உயிரைக் காப்பதற்காக அதிவேகமாக உள் நுழையும் அவசர ஊர்தி ...
Comments