Posts

Showing posts from September, 2021

எரி

எரிக்கும் குணம் உண்டல்லவோ நெருப்புக்கு அதனாலேயே எட்ட நின்று பார்க்கிறோம்..

எண்கள்

சில தொடர்பு எண்கள் அழுத்தமாக்குகிறது ஆனாலும் சிநேகிக்கிறது... வியர்வை என்பதற்காக வெயிலை விரட்டவா முடியும்?

கொஞ்சம் சிரியேன்

வருவதும் போவதுமாய் எத்தனை வரவுகள் மெளனங்களில் கொஞ்சம் பேச்சுகளில் கொஞ்சம் சில்மிசங்களில் கொஞ்சம் சிபாரிசுகளில் கொஞ்சம் அரவணைப்பில் கொஞ்சம் அன்பில் கொஞ்சம் அறிவில் கொஞ்சம் கண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் குவியும் நொடிகளெல்லாம் குறையாமல் இருக்கட்டும் உந்தன் சிரிப்பு நாளையும் தொடரட்டும்...

ரசி

ரசிக்கும் மனம் வேண்டும் ரணங்களற்ற உலகம் காண ராட்சச இதயம் வேண்டும் ரசனைமிகு பொருள் தீண்ட...

மனமே கேள்

எண்ணி நகைத்துவிட்டு போவதற்கும் எள்ளி நகைத்துவிட்டு போவதற்கும் உயிர்பெரும் வாழ்க்கையுண்டு மனமே கேள்.....

ஒரு முறைதான்

ஒரு முறைதான் உலகும் உழவும் உறவும் உயிரும் சாரலெல்லாம் வேண்டாம்... அடைமழை தான் ஆனந்தம் தான் இரவில் வானவில்லும் பகலில் நிலாவும் எண்ணத்திலேனும் முளைக்கட்டும்...

அன்பு தானே

இயலும் அன்பும் முயலும் பண்பும் மூர்க்கத்தில் சிம்மமாய் கர்ஜிக்கையில் இனம்புரியா சலசலப்பிற்கும் இயங்க சொல்லும் தன்முனைப்பிற்கும் இதயமே பொறுப்பேற்கிறது...

மென்மை

உச்சி வெயில் தார்சாலைக்கு தெரிவதில்லை பாதங்களின்  மென்மை....

வாழ்

எளிது தான்... சில நேரங்கள் சில மனிதர்கள் சில புன்னகைகள் சில அழுகைகள் சில அழுத்தங்கள் சில அரவணைப்புகள் சில சிலாகிப்புகள் சில ரசனைகள் பல முயற்சிகள்... எளிது தான் இன்னொரு முறை வாழ்ந்திட...