Wednesday, 22 April 2020

வகுப்பறை


த்தங்களால் முத்தமிட்டு
தொடங்கிய பாடம்
கிறுக்கச் சொன்ன
எழுதுகோல் வாசனை
கரங்கள் இணைத்து
அறுத்து அகற்றிய
தீண்டாமை யோசனை
நிறைந்த இனிப்பில்
திகட்டாத நா….
வகுப்பறை
வேதியியல் வினையில்
கவிதை பிரசவித்த
களஞ்சிய கூடம்
தமிழால் நா தாகம்
தீர்த்த தண்ணீர் பந்தல்
உயிரியலென பிரபஞ்சம்
பார்வையிட்ட
நகராச் சுற்றுலா
அந்த வகுப்பறை
சாரல் மொழி
சமிஞைகளால்வெற்றிடமானது
அந்த வகுப்பறை
அன்று கிறுக்கிய
எழுத்துகளின்  முயற்சி
இன்று கிறுக்குகிற
கவிதைகளின் தொடர்ச்சி….
அள்ளிக் கொடுத்தது
அந்த வகுப்பறை
அன்றும் புதியதாயில்லை
இன்றும் பழையதாயில்லை
என்றும் மறைவதாயில்லை
எந்தன் வகுப்பறை
வாடைக் காற்றால்
இடைவெளியானது
வகுப்பறைக்கும் எனக்கும்
தென்றல் காற்றால்
இணைவானது இந்நொடி
வகுப்பறைக்கும் எனக்கும்

-சரவணன் கந்தசாமி...


3 comments:

Abi said...
This comment has been removed by the author.
Abi said...
This comment has been removed by the author.
Abi said...

👏 classroom la irrukum pothu theriyala anthan perimai ipoo unga kavithai la purinchuchu .... To be continue & congratulations 👍😊

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...