ஒட்டுமொத்த எண்ணத்தின்
ஒப்பில்லாத சுட்டுவிரல் ஒற்றன் …
காகிதத்திற்கும் கருத்துக்குமாய்
கடிதங்கள் வரைந்தவன்
வள்ளுவனுக்கும் கம்பனுக்கும்
இலக்கியமாய் ஒற்றி நின்று
வரலாறு தந்தவன்….
நாவடக்கம் சொன்ன தமிழை
நளினமாய் மெய்யில் கோர்த்து
தலைமுறைகள் ஞானம் பெற
காகித்தில் உரைத்தவன்…
அரசியல் நெற்றிக்கண் திறப்பினுமிங்கே
குற்றம் குற்றமாயின்
தயவில்லா தண்டனைக்கு
தர்க்கம் சுழித்து
அரசியல் சாசன பதிப்பின் அர்த்தம் தந்தவன்…
தமிழ் மீசைக் கவிஞன்
நாட்டை மீட்ட்தும் இவனால்
கவியரசு காகிதத்தில்
தத்துவம் தந்ததும் இவனால்
அடிமை பொருளாதாரத்தால் முடக்கப்பட்டவன்
பொறுக்கமுடியா உணர்ச்சிகளை
முதல்வனுக்கும் செய்தியனுப்ப
முடியுமென முழங்கியவன்
எல்லோரும் ஓர்குலமாய்
எந்நாளும் நின்றிடவே
எழுத்துலகில் இவனிருக்க
எழுத்தாளனுக்கு ஏது பயம் ?
அவரின் அக்கினி குஞ்சொன்றெடுத்து
அணையாத இவனில் நுழைத்து
அறிவுக்கும் இங்கே
ஆற்றலுக்கும் இங்கே
ஆகமங்கள் செய்திட வேண்டும்
எனக்குமாய் எல்லோர்க்குமாய்
விரல் ரேகைக்கும் வெள்ளைத்தாளுக்கும்
குறும்பாலம் குடைந்த குயவன்….
கொப்பளிக்கும் மனவெழுச்சியை
குறிதவறாமல் இந்நொடி
குதூகலமாய் இலக்கிய கல்வெட்டில்
பொறித்துக் கொண்டிருக்கும்
வித்தக கவிஞகன்
பேனா……
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment