Wednesday, 22 April 2020

தோழி


தீர்ந்து போன பேனா
திகட்டிப் போன இனிப்பு

நீர்த்துப்போன கண்ணீர்
நிரம்பி வழிந்த ஆறு
சிறகு விரித்த பறவை
சிரிப்பு மொழிந்த குழந்தை
சில கிறுக்கள் மேசைகளின்
எழுதாத பக்கங்கள்
என்னுடைய எண்ணத்தை
தட்டி எழுப்புகிறது,,,
புரிதலுற்றதலோ இந்த
பிரிதலும் ஆனதிங்கே….
பேனா பிடித்த சுட்டு விரல் நகம்
தேந்து போன
ரேகை மாயங்கள்
உன்னுடைய நினைவுகளை
உறுத்தலாய்  பதித்துப்
புதுப்பிக்கும் பொழுதெல்லாம்
கண்ணீர் இல்லாமல்
கண்களை பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு அது அழகல்ல
என்பது உனக்கு தெரியும்….

-சரவணன் கந்தசாமி...


No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...