நண்பா
முயற்சி செய்தால் முடியும் இன்றே
திருப்பியனுப்பலாம் இரவை இங்கே
உறக்கத்தை உதறி எரிந்து
மூடத்தனத்தை மூட்டை கட்டி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
துவண்டு போனால் துரும்பாய் ஆவாய்
துள்ளி எழு தூணாய் நிற்பாய்
விவேகத்தோடு வெற்றி கொள்
வீரத்தோடு நிலைத்து நில்
விதியை மதியால் மிதித்து உடை
சதியை சன்னலில் தூக்கி வீசு
உழைப்பை தினமும் உணவாய் தின்று
களைப்பை, நாளும் கசக்கி கொளுத்து
பொறாமை இல்லா போட்டி கொள்
இவை அடங்கிய மன எழுச்சியால்
தடைகளை தாண்டிச் செல்.....
சரவணன்கந்தசாமி...
Comments