மாயம்

காக்கைகளை சுட்டுகையில்
கூட்டமென்று கூறுவதால்
தனித்து விடப்பட்ட காக்கைகள்
உவமைக் கூட உதவுவதில்லை!.

சிவகாசி சரவெடி சிதறுகையில்
தாவிக்குதித்த சிறுதுளி
காலருகே வெடிக்கும் வரை
கண்களுக்குத் தெரிவதில்லை

காலில் சக்கரம் பிணைக்கப்பட்டதால்
கடிகார நொடிமுள்
இவர்கள் கணக்கில்
தெரிவதில்லை

மசி தீர்ந்து போன பின் தான்
எழுதுவது பேனாவென்பது
ஏறத்தாழ தெரிகிறது

மண்டியிட்டு வணங்கப்பட்ட
இரும்பு இதயங்களை
எத்தனை இமைகள் திரும்பிப்பார்க்கின்றனர்...?

தெரியாத கல்லொன்று
"தெறி"க்கையில் உணர்கிறார்கள்

பெரும்பாறை நொறுங்குகையில்
உள்ளவாறு மறுக்கிறார்கள்...
உண்மையில் மறக்கிறார்கள்..

இனி என்ன?

புதிய பரிமாணம் தான்....


...
சரவணன் கந்தசாமி

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்