அகன்ற வானத்தின்
அளவில்லாத எல்லைக்கப்பால்
ஆயிரம் வானவில்கள்
ஆண்மை பெறுகிறது
இயல்பினதாய் இந்நிகழ்வை
இங்குள்ளோர் நினைத்துவிடின்
ஈக்களின் சிறகசைவில்
ஈன்ற கன்றின் முதல் இசையில்
உயிரில் நிலை பெற்று
ஊக்கம் அதைப் பெற்று
எழம்பும் சுவராக
ஏழு ஸ்வரமாக
ஐயத்தை துளையிட்டு
ஒற்றை நோக்கோடு
ஓராயிரம் முயற்சிகளுடன்
ஒளவியம் போற்றி நில்
"ஃ" ஏந்தி நில்!.....
அளவில்லாத எல்லைக்கப்பால்
ஆயிரம் வானவில்கள்
ஆண்மை பெறுகிறது
இயல்பினதாய் இந்நிகழ்வை
இங்குள்ளோர் நினைத்துவிடின்
ஈக்களின் சிறகசைவில்
ஈன்ற கன்றின் முதல் இசையில்
உயிரில் நிலை பெற்று
ஊக்கம் அதைப் பெற்று
எழம்பும் சுவராக
ஏழு ஸ்வரமாக
ஐயத்தை துளையிட்டு
ஒற்றை நோக்கோடு
ஓராயிரம் முயற்சிகளுடன்
ஒளவியம் போற்றி நில்
"ஃ" ஏந்தி நில்!.....
-சரவணன் கந்தசாமி...
1 comment:
அருமை கவிஞரே. .☺☺
Post a Comment