Posts

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது காவியம் செய்தோம்!... புத்தகம் எடுத்தோம் புதியன செய்தோம்!... வில் எடுத்தோம் அதிலே வீரங்கள் செய்தோம்!... வம்பு எடுத்தால் வாயை உடைத்தோம் ராக்கெட் எடுத்தோம் உயர் வானம் அளந்தோம் அணு துளைத்து அதில் இராணுவம் செய்தோம் துப்பாக்கி எடுத்து எம் தேசம் காத்தோம் ஆசிரியம் பயின்று அதில் அறிவை தந்தோம்!... கணினிகள் திறந்து பல கனவுகள் படைத்தோம் அன்புகளோடு அழகு பண்புகள் செய்தோம் ஆறுதலோடு ஒரு தேறுதல் செய்தோம்.. காதலோடு ஒரு கண்ணியம் செய்தோம் பெண்ணாக நின்று குடும்பம் செய்தோம்!... இப்பிறவி எடுத்தோம் புவியினை காக்க... ஆலயம் செய்து அதில் அழகாய் நின்றோம் சுதந்திரம் செய்தோம் சுயம் தனை காத்தோம்..... பாரதிக்கும் எமதன்பு பெண்மைக்கும் சமர்ப்பணம்....

மகளிர் தினம்

படைப்பவர்கள் என்றுமே வணங்குதலுக்குரியவர்கள்!... பெண்ணிய சுதந்திரம்−இது வரையறுக்கப்பட்ட சுயகட்டுபாடு.. ஆடைகளோடு தலைப்பை சுருக்கினால் நாம் அறிவு கெட்டவர்கள்... வரலாற்றில் பெண்கள் வதைக்கப்பட்ட நாளெல்லாம் கடந்தாகி விட்டது... வால்வீசும் நிமிர்வுமாய் வில்வீசும் நடையுமாய் அறிவான மனதுமாய் வழிநடத்த பெண்கள் வந்து வருடங்கள் பல கடந்தாச்சு.... அன்பென்ற சொல்லுக்கு அவள் பெயர் தான் அறிவு மனதிற்கு அவள் குரல் தான்... தாயாய், தங்கையாய் தாரமாய், நட்பாய் ஆவதிலும் அழிப்பதிலும் அவளுக்கு நிகரென்பது அவள் மட்டுமே.... கணவன் தற்கொலைக்கு பின் "காஃபி கஃபே"க்கு உயிர்கொடுத்தது மாளவிகா எனும் பெண் தான் வாழ்வியலின் வயதான தருணத்தில் வழித்துணையாய் நிற்பவளும் பெண் தான்.... நேற்றைய உள்ளாட்சியில் நிறைய மேயர்கள் பெண் தான்... நீர் நிலம் காற்று என முப்படையிலும் உயர்கிறாள் முன்னுதாரணமாய் திகழ்கிறாள்... இவ்வளவு ஏன் E2E -யில் பெரும்பான்மையே பெண் தான்... சில ஆண்களின் சாபக்கேட்டிற்கு சிரம் தாழ்ந்து பணிகிறோம்.... சரிசமமான மேசையில் உங்களோடு பணி செய்ய மடிக்கணினியை திறக்க எந்நாளும் ...

எரி

எரிக்கும் குணம் உண்டல்லவோ நெருப்புக்கு அதனாலேயே எட்ட நின்று பார்க்கிறோம்..

எண்கள்

சில தொடர்பு எண்கள் அழுத்தமாக்குகிறது ஆனாலும் சிநேகிக்கிறது... வியர்வை என்பதற்காக வெயிலை விரட்டவா முடியும்?

கொஞ்சம் சிரியேன்

வருவதும் போவதுமாய் எத்தனை வரவுகள் மெளனங்களில் கொஞ்சம் பேச்சுகளில் கொஞ்சம் சில்மிசங்களில் கொஞ்சம் சிபாரிசுகளில் கொஞ்சம் அரவணைப்பில் கொஞ்சம் அன்பில் கொஞ்சம் அறிவில் கொஞ்சம் கண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் குவியும் நொடிகளெல்லாம் குறையாமல் இருக்கட்டும் உந்தன் சிரிப்பு நாளையும் தொடரட்டும்...

ரசி

ரசிக்கும் மனம் வேண்டும் ரணங்களற்ற உலகம் காண ராட்சச இதயம் வேண்டும் ரசனைமிகு பொருள் தீண்ட...

மனமே கேள்

எண்ணி நகைத்துவிட்டு போவதற்கும் எள்ளி நகைத்துவிட்டு போவதற்கும் உயிர்பெரும் வாழ்க்கையுண்டு மனமே கேள்.....