மகளிர் தினம்
படைப்பவர்கள் என்றுமே
வணங்குதலுக்குரியவர்கள்!...
பெண்ணிய சுதந்திரம்−இது
வரையறுக்கப்பட்ட சுயகட்டுபாடு..
ஆடைகளோடு தலைப்பை சுருக்கினால்
நாம் அறிவு கெட்டவர்கள்...
வரலாற்றில் பெண்கள்
வதைக்கப்பட்ட நாளெல்லாம்
கடந்தாகி விட்டது...
வால்வீசும் நிமிர்வுமாய்
வில்வீசும் நடையுமாய்
அறிவான மனதுமாய்
வழிநடத்த பெண்கள் வந்து
வருடங்கள் பல கடந்தாச்சு....
அன்பென்ற சொல்லுக்கு
அவள் பெயர் தான்
அறிவு மனதிற்கு
அவள் குரல் தான்...
தாயாய், தங்கையாய்
தாரமாய், நட்பாய்
ஆவதிலும் அழிப்பதிலும்
அவளுக்கு நிகரென்பது
அவள் மட்டுமே....
கணவன் தற்கொலைக்கு பின்
"காஃபி கஃபே"க்கு உயிர்கொடுத்தது
மாளவிகா எனும் பெண் தான்
வாழ்வியலின்
வயதான தருணத்தில்
வழித்துணையாய் நிற்பவளும்
பெண் தான்....
நேற்றைய உள்ளாட்சியில்
நிறைய மேயர்கள்
பெண் தான்...
நீர் நிலம் காற்று என
முப்படையிலும் உயர்கிறாள்
முன்னுதாரணமாய் திகழ்கிறாள்...
இவ்வளவு ஏன்
E2E -யில் பெரும்பான்மையே
பெண் தான்...
சில ஆண்களின் சாபக்கேட்டிற்கு
சிரம் தாழ்ந்து பணிகிறோம்....
சரிசமமான மேசையில்
உங்களோடு பணி செய்ய
மடிக்கணினியை திறக்க
எந்நாளும் முயல்கிறோம்....
பாரதிக்கும் என்
பாசமிகு பெண்மைக்கும்
சமர்ப்பணம்......
வணங்குதலுக்குரியவர்கள்!...
பெண்ணிய சுதந்திரம்−இது
வரையறுக்கப்பட்ட சுயகட்டுபாடு..
ஆடைகளோடு தலைப்பை சுருக்கினால்
நாம் அறிவு கெட்டவர்கள்...
வரலாற்றில் பெண்கள்
வதைக்கப்பட்ட நாளெல்லாம்
கடந்தாகி விட்டது...
வால்வீசும் நிமிர்வுமாய்
வில்வீசும் நடையுமாய்
அறிவான மனதுமாய்
வழிநடத்த பெண்கள் வந்து
வருடங்கள் பல கடந்தாச்சு....
அன்பென்ற சொல்லுக்கு
அவள் பெயர் தான்
அறிவு மனதிற்கு
அவள் குரல் தான்...
தாயாய், தங்கையாய்
தாரமாய், நட்பாய்
ஆவதிலும் அழிப்பதிலும்
அவளுக்கு நிகரென்பது
அவள் மட்டுமே....
கணவன் தற்கொலைக்கு பின்
"காஃபி கஃபே"க்கு உயிர்கொடுத்தது
மாளவிகா எனும் பெண் தான்
வாழ்வியலின்
வயதான தருணத்தில்
வழித்துணையாய் நிற்பவளும்
பெண் தான்....
நேற்றைய உள்ளாட்சியில்
நிறைய மேயர்கள்
பெண் தான்...
நீர் நிலம் காற்று என
முப்படையிலும் உயர்கிறாள்
முன்னுதாரணமாய் திகழ்கிறாள்...
இவ்வளவு ஏன்
E2E -யில் பெரும்பான்மையே
பெண் தான்...
சில ஆண்களின் சாபக்கேட்டிற்கு
சிரம் தாழ்ந்து பணிகிறோம்....
சரிசமமான மேசையில்
உங்களோடு பணி செய்ய
மடிக்கணினியை திறக்க
எந்நாளும் முயல்கிறோம்....
பாரதிக்கும் என்
பாசமிகு பெண்மைக்கும்
சமர்ப்பணம்......
Comments