Wednesday, 2 September 2020

உலக புகைப் பட தினம் : சரவணன் கந்தசாமி


 

காற்றும் சுவாசமும் போல

லென்சுக்கும் அவர்களுக்கும்

காதல் பிணைந்து கிடக்கிறது

உயிர்மம் நிறைந்து கிடக்கிறது !...

ழுத்தோடு தழுவிக் கொண்டு

நெஞ்சோடு ஓடிக்கொண்டு

புதிய கோணத்தில்

புகைப்படம் செய்யத்தான்

தினமும் ஆராதனை செய்கிறார்கள்

இந்த அழகு மனசுக்காரர்கள்

ஆம்....

அதுவொரு தவம்

காதலை கண் வழியே குடித்து

ஒளிப்படம் புனையும் அதிசயம்...

நிழல்களாய் படர்ந்து நிற்கும்

நிஜங்களை உணரும் ஆச்சர்யம்

கேமிராவோடு  அவர்களின் நேசம்

பித்தனுக்கும் கடவுளுக்குமான

பிணைப்பின் பிரதி!...

ஆம் அதுவொரு தவம்

கேமிராவும் அவைகளும்

சிநேகிக்கும் தவம்!...

வானத்தை அளக்கும்

வண்ணத்துப் பூச்சியாய்

வண்ணங்களில் நினைவுகளை

ஆசை தீர வரைந்து தீர்க்கிறார்கள்!...

தினம் ஒரு திசை துளைத்து

புகைப்படம் புனையத்தான்

அவர்களும் லென்சும்

புரிந்து நடக்கிறார்கள்!...

விழும் அருவியையும்

எழும் கதிரவனையும்

வானத்தை கடக்கும்

வல்லூரையும்

நிறுத்தி அழகுபார்க்கும்

நிபுணத்துவ காதலர்கள்!...

எனக்கும் உனக்கும்

எட்டாத பார்வையொன்றை

லென்சு குவளை வழியே

அழகாய் அழுத்தமாய்

அவர்கள் ஆராதித்து 

மகிழ்கிறார்கள்!...

உலகத்தின் அதிசயங்களையும்

உள்ளூர் வறுமைகளையும்

ஊர் குடிக்கும் கரைவேட்டிகளையும்

உணவில்லாத குழந்தைகளையும்

உலகம் சுற்றும் பண முதலைகளையும்

உறக்கமற்ற ஏழைகளையும்

ஒரே நேர்கோட்டில்

ஒட்ட வைக்கும் சாட்சியாளர்கள்!...

ஓராயிரம் வார்த்தைகளை

கருப்பு வெள்ளை புகைப்படமாய்

கலரான நிழற்படமாய்

சுற்றும் பூமியின்

அத்தனை அணுவையும்

அசைத்துப் பார்த்து

அள்ளிக் கோர்க்கும்

அழகுக்காரர்கள்!...

ஆனந்த அழுகைகளையும்

இளமையின் நினைவுகளையும்

வயதாகாமல் சுவர் பதிக்கும்

வல்லுநர்கள்!...

முதுமையின் மூப்பில்

நடுங்கும் விரல் தொட்டு

 புகைப்படத்தை இறுதி சுவாசம்

தழுவும்போது

கேமிராவோடு பிணைந்த

இவர்களின் காதலும்

கடவுளைப் போல

காலங்களை கடந்து நிற்கிறது!...


சரவணன் கந்தசாமி

 

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...