Tuesday, 12 February 2019

நேர் எதிர்

கன்ற வானத்தின்
ளவில்லாத எல்லைக்கப்பால்
யிரம் வானவில்கள்
ண்மை பெறுகிறது
யல்பினதாய் இந்நிகழ்வை
ங்குள்ளோர் நினைத்துவிடின்
க்களின் சிறகசைவில்
ன்ற கன்றின் முதல் இசையில்
யிரில் நிலை பெற்று
க்கம் அதைப் பெற்று
ழம்பும் சுவராக
ழு ஸ்வரமாக
யத்தை துளையிட்டு
ற்றை நோக்கோடு
ராயிரம் முயற்சிகளுடன்
ஒளவியம் போற்றி நில்
"ஃ" ஏந்தி நில்!.....


-சரவணன் கந்தசாமி...

கதிரோவியம்

கதிரவன் கவ்வும்
காரிருள் உடைமை
இங்கே சூழ்ந்து
இயல்பை மறைத்தது!...
காற்றினூடும் இனிமையை
ஒளியினூடும் செழுமையை
உணரமுடியா சூழல்
உணரத் துடிக்கும் சூழல்
இரவும் பகலும்
அசையும் உயிர்களும்
அசையாப் பொருட்களும்
அகன்ற வானமும்
ஏக்கத்தின் மீதமாய்
இறுகிக்கிடக்கும்
இருளறைக் கைதிக்கு
இன்னொரு உலகம் தோன்றட்டும்...


-சரவணன் கந்தசாமி...

Sunday, 10 February 2019

உடையும் மனமொழி


 

 தினமும் எதிர்கொள்கின்ற சில சவால்கள் போலே எனது மாணவப்பருவத்தில் செவி வழிச் செய்தியாய் பள்ளித் தோழிகள் பேச்சு வழக்காக பைசிய நினைவுகள் அவர்களின் அன்றைய வேதனைகள் எனக்குள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அன்று . ஏனெனில் நான் அவர்களில் ஒருவனாக (பெண்ணாக) இல்லை.
அன்று என்னால் கடக்க முடிந்த அந்த நிகழ்வினை ஒரு சாமானியனாக , மாணவனாக என்னால் இன்று அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலவில்லை .
  மாற்றத்தை கனவு காணும் ஒரு சாமானிய இளைஞனாக எழுதுகிறேன் இதன் உண்மைத்தன்மையின் ஒரு அடியேனும் உங்கள் மனதில் நுழைந்து நூலளவு மாற்றம் ஏற்படினும் பெருத்த மகிழ்வு கொள்வேன்.
   நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் தரணியிலே யாவருக்கும் அஞ்சாத தன்மையும் பெண்களுக்கு வேண்டுமென்ற பாரதியின் ஏவல் தான் எனது தேடுபொறி.
   பெண்ணவளை வரம்புக்குள் வைத்து வாழப் பழக்கிய நம் சமூகத்தில் தான் வேலுநாச்சியாரும் , குயிலியும் மேலும் அசோகச்சக்கரவர்த்திக்கு மெய்க்காப்பாளர்களாய் பெண்கள் வீறுநடை போட்டிருக்கிறார்கள் . இந்த பெண்களின் இளையதலைமுறை இன்று பள்ளிகளால் விதைக்கப்படுகின்றன. இந்த பள்ளி மாணவிகளின் அதிலும் அரசுப்பள்ளி அதிலும் கிராமப்புற அரசுப் பள்ளியெனில் அவர்கள் எதிர்கொள்ள அஞ்சும் முதல் பிரச்சினை கழிவறை .
   ஆம் , நாகரீகத்தின் தொடக்கமாய் பாலியல் கல்வியை பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டுவருவதற்காக நடக்கும் விவாதங்களுக்கு மத்தியில் மாதவிடாய் பற்றி வெளியில் பேசக்கூடாது என்கிற தவறான எண்ணம் மாறிவரும் என் தாய்மை சமுதாயத்தின் மத்தியில் இதனை பேசுவதிலொன்றும் தவறில்லை . பேசித்தான் ஆக வேண்டும் . மாணவிகளை மட்டுமே மையப்படுத்துவதால் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல இதன் அநேக பாதிப்பு அவர்களுக்கு இல்லை என்பதே நாம் தினமும் கடந்து செல்லும் பேருந்து நிலைய சிறுநீர் கழிக்காதீர் சுவர் யதார்த்தம்.
  தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்து உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் நான் . எங்களுக்கு பிரத்யேக கழிவறை அமைக்கப்பட்டது என்னவோ உண்மை தான் இருப்பினும் பாதுகாப்பும் கவனிப்பும் இல்லையேல் எதுவும் வீண் என்பது போலத்தான் அந்தக் கழிவறையின் நிலையும் , பெண்களுக்கும் இதே நிலை தான் . திறந்த வெளி கழிப்பிட வசதி ஆண் மாணவர்களுக்கு  பெரிதான தாக்கமில்லை எனினும் என்னுடன் பயின்ற மாணவிகளின் நிலை? அன்றைய நிலை இன்னும் தொடர்கிறது இது தான் இதன் தொடக்கம் .
  தூய்மை இந்தியா , திறந்தவெளிக்கழிப்பிடம் உடல்நலத்திற்கு கேடு என்று பேரணி நடத்தும் எத்தனை அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கென்று கழிவறை இருக்கிறது ? யதார்த்த உண்மையென்பது இல்லையென்பது (அ) கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது . சக மாணவிகளோடு பகிர்ந்து கொள்ள முடியாத அப்படியே பகிர்ந்தாலும் இதையெல்லாம் வெளியில் சொல்வதா ? என்கிற எண்ணம் மாணவிகளை மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் கழிவறை தொடர்பான பள்ளி ஆய்வறிக்கையை தேடிய போது நான் வாசித்த தனியார் ஆய்வறிக்கையில்  , பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பூப்பெய்துவது 13 முதல் 15 வயதிலேயே நடக்கிறது என்றும் இது அவர்களின் நடுநிலைப்பள்ளி காலத்தினை அநேகமாக குறிக்கிறது. இந்த வயதுகளில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு கட்டாயம் கழிவறை அவசியம் இருப்பினும் பல கிராமத்து அரசுப்பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்றும் அப்படியே கழிவறை இருப்பினும் பராமரிப்பின்மையால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டே தனது கல்வியை தொடர்கிறார்கள் என்றும் மாணவ , மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லாததால் குறிப்பிட்ட இடைவேளை நேரத்தில் பல மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் இயற்கை உபாதைகளை வெளியேற்ற முடியாமல் நோய்த் தொற்றுக்கு ஆளாவதாகவும் இதனால்  மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் , தமிழக அரசு ,   அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டும் ஏதோ பொங்கலுக்கு அரசு பரிசு தருவது போல என்றோ ஒரு நாள் மட்டும் கடமைக்கு பள்ளியில் நாப்கின் வழங்கப்படுவதாகவும் புகார்கள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும் , சில தனியார் பள்ளிகளிலும் மாணவ,மாணவிகளுக்கான கழிவறை மற்றும் நாப்கின் பயன்பாடு போன்றவற்றை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினால் முறையாக ஏற்படுத்தி தர இயலவில்லையென்றும் அந்த தனியார் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . எங்களை வழிநடத்தும் பெருமைமிகு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு , தங்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறது என்று மகிழ்வடையும் அதே தருணத்தில் உங்களையே நம்பி , உங்களையே வழிகாட்டிகளாக கொண்டு எதிர்கால கனவுகளை இதயத்திலும் , முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு கழிவறையும் , சுகாதாரமும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , புதிய கழிவறைகள் கட்டவும் ,  பயன்படுத்த இயலாத கழிவறைகளை சீரமைக்கவும் சிறுமுயற்சிகளையும் அதன் உண்மைத்தகவல்களையும் அரசுக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோள் ஏனெனில் பள்ளியின் உண்மை நிலை ஆசிரியர்களைத் தவிர வேறு எவருக்கும் ......ஏன் அரசுக்கே தெரியாது என்பது தான் உண்மை .பெற்றோர்கள் உங்கள் பின்னால் இருக்கிறார்கள் நிச்சயம் இருப்பார்கள். அதிலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த ஊர்ப் பொதுமக்கள் அனைவருக்கும் உள்ள கடமை இருப்பினும் தன் பொறுப்பை மறந்து அரசுப்பள்ளிகளை சேதப்படுத்தும் , நாசப்படுத்தும் சமூக கிறுக்கர்கள் அவர்களாகவே தங்களை மனித தன்மையிலிருந்து கீழிறக்கிக் கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
  தூய்மை இந்தியா , வீட்டுக்கொரு கழிவறை திட்டம் மூலம் சுகாதார மேம்பாடுகளை முன்னெடுக்கும் நமது பாரத பிரதமர் அவர்களின் நோக்கம் பள்ளிக் கழிவறைகளை ஏற்படுத்தாமலும் அதனை சீரமைக்காமலும் நிறைவடையாது. இன்றைய இளம் சிறார்களின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே நமது வளமான வல்லரசு எதிர்காலம்...
 

"அறத்தினாலொரு மாற்றம் துவே
       மனித சமுதாயத்தின் சுயமுன்னேற்றம் "

எனது பள்ளித் தோழிக்கும் , என்னை வழிநடத்தும் ஆசிரியப் பெருந்தகைக்கும் நன்றிகள் பல....

   தொடரும் அன்பு எழுத்துக்களுடன்
      சரவணன்கந்தசாமி...
     
                    நன்றி....

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...