தினமும் எதிர்கொள்கின்ற சில சவால்கள் போலே எனது மாணவப்பருவத்தில் செவி வழிச் செய்தியாய் பள்ளித் தோழிகள் பேச்சு வழக்காக பைசிய நினைவுகள் அவர்களின் அன்றைய வேதனைகள் எனக்குள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அன்று . ஏனெனில் நான் அவர்களில் ஒருவனாக (பெண்ணாக) இல்லை. அன்று என்னால் கடக்க முடிந்த அந்த நிகழ்வினை ஒரு சாமானியனாக , மாணவனாக என்னால் இன்று அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலவில்லை . மாற்றத்தை கனவு காணும் ஒரு சாமானிய இளைஞனாக எழுதுகிறேன் இதன் உண்மைத்தன்மையின் ஒரு அடியேனும் உங்கள் மனதில் நுழைந்து நூலளவு மாற்றம் ஏற்படினும் பெருத்த மகிழ்வு கொள்வேன். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் தரணியிலே யாவருக்கும் அஞ்சாத தன்மையும் பெண்களுக்கு வேண்டுமென்ற பாரதியின் ஏவல் தான் எனது தேடுபொறி. பெண்ணவளை வரம்புக்குள் வைத்து வாழப் பழக்கிய நம் சமூகத்தில் தான் வேலுநாச்சியாரும் , குயிலியும் மேலும் அசோகச்சக்கரவர்த்திக்கு மெய்க்காப்பாளர்களாய் பெண்கள் வீறுநடை போட்டிருக்கிறார்கள் . இந்த பெண்களின் இளையதலைமுறை இன்று பள்ளிகளால் விதைக்கப்படுகின்றன. இந்...