Posts

Showing posts from September, 2020

உலக புகைப் பட தினம் : சரவணன் கந்தசாமி

Image
  கா ற்றும் சுவாசமும் போல லென்சுக்கும் அவர்களுக்கும் காதல் பிணைந்து கிடக்கிறது உயிர்மம் நிறைந்து கிடக்கிறது !... க ழுத்தோடு தழுவிக் கொண்டு நெஞ்சோடு ஓடிக்கொண்டு புதிய கோணத்தில் புகைப்படம் செய்யத்தான் தினமும் ஆராதனை செய்கிறார்கள் இந்த அழகு மனசுக்காரர்கள் ஆம்.... அதுவொரு தவம் காதலை கண் வழியே குடித்து ஒளிப்படம் புனையும் அதிசயம்... நிழல்களாய் படர்ந்து நிற்கும் நிஜங்களை உணரும் ஆச்சர்யம் கேமிராவோடு   அவர்களின் நேசம் பித்தனுக்கும் கடவுளுக்குமான பிணைப்பின் பிரதி!... ஆம் அதுவொரு தவம் கேமிராவும் அவைகளும் சிநேகிக்கும் தவம்!... வானத்தை அளக்கும் வண்ணத்துப் பூச்சியாய் வண்ணங்களில் நினைவுகளை ஆசை தீர வரைந்து தீர்க்கிறார்கள்!... தினம் ஒரு திசை துளைத்து புகைப்படம் புனையத்தான் அவர்களும் லென்சும் புரிந்து நடக்கிறார்கள்!... விழும் அருவியையும் எழும் கதிரவனையும் வானத்தை கடக்கும் வல்லூரையும் நிறுத்தி அழகுபார்க்கும் நிபுணத்துவ காதலர்கள்!... எனக்கும் உனக்கும் எட்டாத பார்வையொன்றை லென்சு குவளை வழியே அழகாய் அழுத்தமாய் அவர்கள் ஆர...